இவ்வாறு செய்தால் ஒரு கோழிக்குஞ்சு கூட இறக்காது-BROODING IN tamil

 

Brooding

வணக்கம் நண்பர்களே இந்த பதிவு நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும்.

நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான பிரச்சனை இளம் குஞ்சுகள் குறுகி நின்று இருக்கிறது என்பதாகும்.




 இதனை எவ்வாறு சரி செய்யலாம் என பார்க்கலாம்.


நாட்டுக் கோழிகள் பொதுவாக 37.5 டிகிரி செல்சியஸ் என்று வெப்ப நிலையில் காணப்படும்.

 இந்த வெப்பநிலை கோழிகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்கள் மற்றும் பல உயிரினங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு வெப்பநிலையாகும்.

 இளம் கோழி குஞ்சுகள் அதாவது பொரித்த முதல் 20 நாட்களுக்கு இந்த வெப்பம் மிகவும் இன்றியமையாத ஒன்று.

பொரித்த இளம் கோழி குஞ்சுகளுக்கு சரியான சீரான வெப்பம் பற்றா குறையினால்

1. உடல் வளர்ச்சிக் குறைவு

2. சுறுசுறுப்பின்மை

3. தொங்கிய இறகு

4. சோர்வாக காணப்படுதல்

5. தீவனம் உட்கொள்ளாமை

6. ஒரே இடத்தில் குறுகி நின்று விடுதல் 

7.இளம் குஞ்சுகள் பின் பகுதியில் கழிவு ஒட்டி ஓரிரு நாட்களில் இறந்து விடுதல் 

8. சுவாச கோளாறுகள் ,

மேலும் பல பிரச்சினைகள் இளம் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படுகின்றன.


இதற்கு ஒரே தீர்வு புரூடிங் மட்டுமே 

பல கோழிக்குஞ்சுகளை காப்பாற்ற உதவும் எளிய செயல் முறையே புரூடிங்.


ப்ரூடிங்க் அமைப்பு :

 தரையிலோ அல்லது கூண்டிலோ வட்ட வடிவில் 1 1/2 அடி உயரமுள்ள அட்டை அல்லது தகரத்தை  ஒரு மீட்டர் ஆரமாக சுற்றி வைத்து, அதன் மையத்தில் 50 கோழி குஞ்சுகளுக்கு ஒரு 60 வாட்ஸ்  குண்டு பல்ப் அரை அடி உயரத்தில் அமைத்து செயற்கை வெப்பம் முதல் 18 நாட்களுக்கு கட்டாயம் அளிக்க வேண்டும்.

Brooding method


மேலும் தீவனம் மற்றும் சுத்தமான நீர் எப்போதும் இருக்கும்படி அமைக்க வேண்டும்.

இவ்வாறு செயற்கை வெப்பம் அளிப்பது இளம் குஞ்சு நோயின்றி நன்கு வர சரியான சூழ்நிலையாகும்.

கூண்டு முறையில் புரூடிங் செய்வது கழிவுகள் மேலாண்மைக்கு எளிதாக அமையிம்.

புரூடிங் ஓர் எளிய செயல்முறைதான், 

ஆனால் பல கோழி குஞ்சுகளை காப்பாற்ற உதவும்.

 இது மேலும் புரூடிங் பற்றிய தெளிவான விளக்கம் வீடியோ பதிவில் காணுங்கள்..



பண்ணை முறையில் கோழி வளர்ப்போர் லாபம் பெற புரூடிங் ஓர் முக்கிய அங்கமாக செயல்படுகிறது.




Previous
Next Post »