கோழிஅடைவைப்பது எப்படி-Natural Egg incubation method

 வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் நாட்டுக்கோழிகளை எப்படி அடைவைத்தால் அதிக பொரிப்புத்திறன் கிடைக்கும் என்பது குறித்து பார்போம்.

நாட்டு கோழி

அடைவைக்க சிறந்த கோழி:


அடைவைக்க சிறந்த கோழி ரகம் சிறுவிடைக் கோழிகள் ஆகும்.

இவை நல்ல தாய்மை உணர்வுமிக்கவை எனவே அடை படுப்பதில் மற்றும் குஞ்சுகள் பராமரிப்பில் சிறப்பானவை.

அதேபோல சேவலும் நல்ல தரமானதாக இருக்க வேண்டு்ம்.

Peruvidai koli




முட்டை தரம் அதிகரிக்க: 
Chicken eggs

முட்டையிடும்  கோழிகளுக்கு நல்ல தீவணம் அளித்து தரமான முட்டைகளை(Good quality eggs production) பெறலாம்.

கோழிகளுக்கு 

1.கம்பு,

2.கருவாடு தூள்/மீன் கழிவுகள் 

கட்டாயம் கொடுக்க வேண்டும்.

Protein Rich feed for chicks

இவ்வாறு கொடுப்பதனால் முட்டை உற்பத்திக்குத் தேவையான புரதம்(protein),

சுண்ணாம்புச்சத்து (calcium) மற்றும் மிக முக்கியமான ஒமேகா (omega 3) எனும் நுண்ணூட்டச்சத்து கிடைத்து நல்ல தரமான முட்டைகள் உற்பத்தியாகும்.

இதன் மூலம் பெரிப்புத்திறனும் அதிகரிக்கும்.

முட்டைகளை சேகரிக்கும் முறை:
Egg Stroage

முட்டை பொரிப்புத்தினை பாதிக்கும் காரணிகளில் மிகமுக்கியமானது அடைவைப்பதற்க்கு முன் முட்டையை சேமிப்பதே ( Egg Storage) ஆகும்.

👉முட்டைகளை அதிகபட்சமாக 7 நாட்கள் வரை சேமிக்கலாம்.
👉குளிர்சாதனப்பெட்டிகளில் (Fridge) சேமிப்பது சிறந்தது.
👉முட்டையின் நுனி பகுதி கீழ் நேக்கி இருக்குமாறு சேகரிக்க வேண்டும்.
மற்றபடி குளிர் சாதனபெட்டி இல்லாத பட்சத்தில் தவிடு அல்லது அரிசி உள்ள பானைகளில் கூட சேமிக்கலாம்.

அடைவைத்தல் :

அடைவைக்க மணல் பயன் படுத்துதல் சிறந்தது.
மணல் பயன் படுத்தினால் கோழிப்பேன் தொல்லை இருக்காது.
மணலில் சிறிது எறும்பு/பூச்சி மருந்து தூவி நன்கு கலந்து பின் முட்டைகளை வைக்கவும்.

சிறுவிடைக்கோழி எனில் 15 முட்டைகள் வைக்கலாம்.
பெருவிடைக்கோழி எனில் 10 முட்டைகள் வரை வைக்கலாம் .
நாட்டுகோழி அடைவைத்தல்


21 நாட்கள்:

கோழி அடைபடுத்திருக்கும் காலத்தில் (Incubation period)அடையில் அருகில் தண்ணீர் மற்றும் தீவனம் வைப்பதால் , கோழி முட்டைகளை உடைத்து குடிப்பதை தவிர்க்கலாம்.

இவ்வாறு அடைவைத்தால் நிச்சயமாக 100% (Success rate) முட்டை பொரிக்கும்.


கோடை காலங்களில் (Summer seasons)பொரிப்புதிறன் மிகவும் குறைவாகவே இருக்கும்.
மழைகாலங்களில் அடைவைத்தால் அதிக முட்டை பொரிக்கும்.
காரணம் ஈரப்பதமான சூழல் ஆகும்.
வெப்பம் குறைவான பகுதியில் மட்டுமே அடை வைக்க வேண்டும்.
வெயில் காலங்களில் இன்குபேட்டர் (Egg hatching incubators )பயன்படுத்தி முட்டை அடை வைப்பது சிறந்தது.


Previous
Next Post »